கழிவுநீரால் மாணவர்கள் அவதி

Update: 2024-12-22 11:23 GMT

சென்னை முகப்பேர் கிழக்கு, 3-வது பிளாக் பகுதியில் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளிக்கூட வகுப்பறை கட்டிடங்களின் பின்புறத்தில் மழைநீர் பல மாதங்களாக தேங்கி நிற்கிறது. மேலும், மழை நீருடன் பள்ளி கழிவறையில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் கலந்து தேங்கியுள்ளது. இதனால் பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. மேலும், கொசு தொல்லையால் மாணவ-மாணவிகளுக்கு டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் தேங்கியுள்ள நீரை அகற்றவும், அந்தப் பகுதியை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்