அந்தியூர் தாலுகா சின்னதம்பிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட புது மேட்டூர் ரோஜா நகரில் உள்ள சாக்கடை கால்வாயில் செடி, கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக நோய் பரவ வாய்ப்புள்ளது. எனவே செடி, கொடிகளை அகற்றி கழிவுநீர் செல்ல வழி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.