கரூர் மாவட்டம் குளத்துப்பாளையம் அரசு ஆரம்ப பள்ளி எதிரே கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு கழிவறை கட்டப்பட்டது. இதனை அந்த பகுதிகளை சேர்ந்த பெண்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் குழாய் பழுதடைந்து விட்டதால் கழிவு நீர் வெளியேற முடியாமல் தேங்கி நின்றது. இதன் காரணமாககழிவறையை உள்ளாட்சி நிர்வாகம் பூட்டிவிட்டது. தற்போது கழிவறையை சுற்றி செடி, கொடிகள் முளைத்து தெரியாத அளவிற்கு மூடிவிட்டது. எனவே கழிவறையை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.