பந்தலூர் பஜார் அருகே நகராட்சி மூலம் சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திட்ட மதிப்பீடு ரூ.99 லட்சம் ஆகும். ஆனால் பூங்காவின் நடுவே கூவம் ஆற்றை மிஞ்சிய சாக்கடை நீர் ஓடுகிறது. இது பந்தலூர் பஜாரில் உள்ள வணிக நிறுவனங்களின் கழிவுநீர்தான். இதனால் அந்த பூங்காவை சிறுவர்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே அங்கு சாக்கடை நீர் செல்வதை தடுக்க சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம் ஆவன செய்ய வேண்டும்.