சாலையில் செல்லும் கழிவுநீர்

Update: 2024-12-01 14:01 GMT

ராமநாதபுரம் நகராட்சிக்கு உட்பட்ட கோட்டைமேடு தெரு பகுதியில் நீண்ட நாட்களாக பாதாள சாக்கடையில் உடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் சாலையில் செல்கிறது. மேலும்  தற்போது மழை காலம் என்பதால் சாலையில் தேங்கும் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து செல்கிறது. இதனால் அப்பகுதியில் அதிக துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். .

மேலும் செய்திகள்