சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை அரங்கம் அருகே உள்ள கழிவநீர் குழாய் உடைந்து உள்ளது. அதனால் கழிவுநீர் வெளியேறி அப்பகுதி முழுவதும் தேங்கி உள்ளது. அதிலிருந்து துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. இந்த கழிவுநீர் குழாய் மாதத்தில் 2 முதல் 3 முறை உடைந்து கழிவுநீர் வெளியேறுவது தொடர்கதையாக உள்ளது. எனவே இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.