காரிமங்கலம் நகரத்தில் இருந்து பாலக்கோடு செல்லும் வழியில் சாலையோரம் கழிவுநீர் கால்வாய்கள் உள்ளன. இந்த கழிவுநீர் கால்வாய்கள் சில மாதங்களாக தூர்வாரப்படவில்லை. இதனால் இந்த பகுதில் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே கழிவுநீர் கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நவநீதகிருஷ்ணன், காரிமங்கலம்.