சாலையில் கழிவுநீர்

Update: 2024-11-17 13:57 GMT

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் செந்தமிழ் சேது பிள்ளை தெருவில் கழிவுநீர் கால்வாய் ஒன்று உள்ளது. இதில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால் கொசு உற்பத்தி அதிகமாகி நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. மேலும் துர்நாற்றம் வீசுகிறது. சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் முதல் நடந்து செல்லும் பொதுமக்கள் வரை மிகவும் அவதி அடைந்து சாலையை கடந்து செல்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்