சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் இருந்து லயோலா கல்லூரி செல்லும் நடைபாதையில் கடந்த சில மாதங்களாக கழிவுநீர் தேங்கியுள்ளது. மிகவும் முக்கியமான ரெயில் நிலையம் என்பதாலும், அதிக அளவு மக்கள அந்த வழியை பயன்படுத்துவதாலும் அவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக, கல்லூரி அருகில் இருப்பதால் துர்நாற்றத்தை கடந்து மாணவர்கள் கல்லூரிக்கு செல்லும் நிலை உள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் நடைபாதையில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.