பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்தில் முறையான வடிகால் வசதி அமைக்கப்படாமல் உள்ளதால் ஆங்காங்கே சாலை ஓரத்தில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும் மழை பெய்யும்போது அவற்றில் மழைநீர் கலந்து சாலைகளில் ஓடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.