சேலம் சின்ன திருப்பதியில் உள்ளது ஸ்ரீனிவாச நகர். இந்த பகுதிக்கு சாக்கடை கால்வாய் வசதி என்பதே கிடையாது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் சாலைகளிலும், தெருக்களிலும் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக இந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவ வாய்ப்பு உள்ளது. இந்த பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும் என்பதே இங்குள்ளவர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த பகுதிக்கு சாக்கடை கால்வாய் அமைத்து தரவேண்டும்.
-சந்திரசேகரன், சின்னதிருப்பதி.