தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2024-10-13 11:44 GMT

பெரம்பலூர் மாவட்டம், நூத்தப்பூர் தேரடி பள்ளி பகுதியில் சாலையோரம் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல வழியின்றி கடந்த 2 மாதங்களாக கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்