சென்னை சூளைமேடு, சவுராட்டிரா நகர் 8-வது தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் மூடி இல்லாமல் ஆபத்தான முறையில் திறந்து கிடக்கிறது. அந்த பகுதி மக்கள் தற்காலிகமாக அட்டைகள் மூலம் கால்வாயை மூடி வைத்துள்ளனர். மழை காலங்கள் தொடங்கிய நிலையில் பள்ளம் தெரியாமல் கால்வாயில் சிலர் விழும் நிலை உள்ளது. எனவே ஆபத்தை உணர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் கால்வாய்க்கு புதிய மூடியை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.