தஞ்சாவூர் வடக்கு வீதி மூலை அனுமார் கோவில் முதல் ராணி வாய்க்கால் சந்து வரை மழை நீர் வடிகால் கட்டுவதற்காக அங்குள்ள குடியிருப்புகளில் முன் பகுதியை உடைத்தனர். ஆனால் மழைநீர் வடிகால் கட்ட ஆரம்பிக்கவில்லை. இதனால் சாக்கடை நீர் அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. அருகில் பள்ளிக்கூடம், ரேஷன் கடை உள்ளதால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மழை நீர் வடிகால் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், தஞ்சாவூர்