கழிவுநீர் கால்வாய் சீரமைக்கப்படுமா?

Update: 2024-09-15 11:56 GMT

சென்னை வளசரவாக்கம், ஸ்ரீலட்சுமி நகர் 4-வது தெரு பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளி அருகில் உள்ள சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாய் சேதமடைந்து உள்ளது. இதனால் கழிவுநீர் சாலையில் ஆறுபோல ஓடுகிறது. பள்ளி செல்லும் மாணவர்கள் இந்த சாலையை கடக்கும்போது மிகவும் அவதி அடைகின்றனர். மேலும், அந்த பகுதி பள்ளம்போல காட்சியளிப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் கழிவுநீர் கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்