பயணிகள் அவதி

Update: 2024-09-15 11:50 GMT

சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரை பறக்கும் ரெயில்கள் இயக்கப்படுகிறது. இந்த நிலையில், இந்திரா நகர் ரெயில் நிலையத்தில் வாகனம் நிறுத்தும் பகுதியில் சிலர் அத்துமீறி சாலைகளில் வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் ரெயில் ஏறவரும் பயணிகள் வந்து செல்ல மிகவும் சிரமப்படுகிறார்கள். இரவு நேரங்களில் அந்த பகுதி மக்கள் வாகனத்தை கொண்டு வந்து, ரெயில் நிலைய சாலையில் நிறுத்து விட்டு செல்வதாகவும் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து ரெயில்வே நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்