அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த மாசிநாயக்கன்பட்டிலிருந்து அயோத்தியாப்பட்டணம்-சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் கல்லூரி பஸ் நிறுத்தம் வரை சாக்கடை கழிவுநீர் கால்வாயில் செல்கிறது. அதற்கு மேல் சாக்கடை கழிவுநீர் செல்ல வழி இல்லை. இதனால் கழிவுநீர் வெளியேறி சாலைக்கு செல்கிறது. இதனால் பொதுமக்கள் அந்த பகுதிக்கு செல்ல வழி இல்லாமல் அவதிக்குள்ளாகின்றனர். எனவே கழிவுநீர் செல்ல அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-பாபு, சேலம்.