சேலம் மாவட்டம் கெங்கவல்லி பேரூராட்சி தியேட்டர் வலதுபுறம் ஆத்தூர் மெயின் ரோடு கிழக்கு பகுதியில் சுமார் 250-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் கடைகள் உள்ளன. குடியிருப்பு பகுதிகளின் இருபுறமும் கழிவுநீர் செல்ல கால்வாய் வசதி இல்லை. இதனால் இந்த பகுதியில் சாக்கடை கழிவுநீர் குளம் போல் தேங்கி காட்சியளிக்கிறது. இதனால் இங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைத்து தர வேண்டும்.
-முருகானந்தம், சேலம்