சென்னை சைதாப்பேட்டை ரெயில் நிலையத்திற்கு செல்லும் வழியில் உள்ள சுரங்கப்பாதை பயங்கர துர்நாற்றம் வீசியது. இது குறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானதும், மாநிகராட்சி அதிகாரிகள் அந்த பகுதியை உடனடியாக சுத்தம் செய்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணை நின்ற தினத்தந்திக்கும் அப்பகுதி மக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.