ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள சாலையில் பாதாள சாக்கடை குழி உள்ளது. இ்ந்த குழியின் மேல் மூடி உடைந்து காணப்படுகிறது. அதோடு கால்வாயில் அடைப்பும் ஏற்பட்டு உள்ளது. இது தவிர மூடி உடைந்து கிடப்பதால், அதில் மரக்கிளையை சொருகி வைத்து உள்ளனர். இது அந்த வழியாக வந்து செல்வோரை முகம் சுழிக்க வைக்கிறது. மேலும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்துகிறது. எனவே அடைப்பை நீக்கி மூடியை சரி செய்ய அதிகாரிகள் உரிய நடவடிக்ைக எடுக்க வேண்டும்.