கழிவுநீர் கால்வாய் வசதி

Update: 2024-06-09 18:06 GMT

கெங்கவல்லியில் உள்ள ஒரு சினிமா தியேட்டர் பஸ் நிறுத்தத்தையொட்டி தார்சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பகுதியில் ஆத்தூர் பிரதான சாலையில் சாக்கடை கால்வாய் இல்லாததால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடை கழிவுநீர் வெளியேறும் வகையில் கால்வாய் வசதியை ஏற்படுத்த வேண்டும். மேலும் இந்த சாலையை அகலப்படுத்த வேண்டும் என்றுபொதுமக்கள் தரப்பில் கோரிக்கை இருந்து வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-விமல், கெங்கவல்லி.


மேலும் செய்திகள்