சாக்கடை கால்வாய்க்கு மூடி வேண்டும்

Update: 2024-06-02 17:09 GMT

கிருஷ்ணகிரி தாலுகா பெத்ததாளப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட ஆனந்த் நகரில் 25-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டது. ஆனால் கால்வாயின் மீது சிமெண்டு மூடி போடவில்லை. இதனால் கால்வாயின் மறுபகுதியில் வசிப்பவர்கள் வாகனங்களில் சென்று வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாக்கடை கால்வாய்க்கு மூடி அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜ், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்