சென்னை கீழ்ப்பாக்கம், போலீஸ் குடியிருப்பில் ஏ மற்றும் டி பிளாக் அருகில் கடந்த ஒரு வார காலமாக கழிவுநீர் வெளியேறுகிறது. இதனால் அதிகஅளவு துர்நாற்றம் வீசுகிறது. மேலும், குடியிருப்பு பகுதி என்பதால் அந்த பகுதி மக்களுக்கு நோய் தொற்றும் அபாயம் உள்ளது. மேலும், அந்த வழியாக பொதுமக்கள் செல்ல முடியாத அளவிற்கு சாலையில் கழிவுநீர் தேங்கியுள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.