சென்னை சேத்துப்பட்டு, ஜெகநாதபுரத்தில் ரேசன் கடை ஒன்று உள்ளது. அந்த கடையின் அருகே உள்ள ஒரு வீட்டில் இருந்து கழிவுநீர் வெளியேறுகிறது. அந்த கழிவுநீரால் பொதுமக்கள் மிகவும் அவதியடைகின்றனர். மேலும் கழிவுநீரை முறையாக வெளியேற்றாமல், அப்படியே விட்டு இருப்பதால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் ரேசன் கடைக்கு வரும் பொதுமக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.