சென்னை மெளலிவாக்கம், பஞ்சாயத்து மாதா நகரில் கழிவுநீர் கால்வாய் சேதமடைந்த நிலையில் உள்ளது. இந்த கழிவுநீர் கால்வாயில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கழிவுநீரில் இருந்து கொசு உற்பத்தி அதிகமாக உள்ளதால், அப்பகுதி மக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, சேதமடைந்த கால்வாயை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.