பொதுமக்கள் கோரிக்கை

Update: 2024-05-12 13:47 GMT

சென்னை எம்.எம்.டி.ஏ.காலனியில் உள்ள பஸ் டெப்போவில் உள்ளே கழிவறை ஒன்று உள்ளது. இந்த கழிவறையை மக்கள் பயன்படுத்த முடியாத வகையில் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. மேலும், இந்த கழிவறையின் இரவு நேரங்களில் சமுக விரோதிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் அந்த பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே, மாநகராட்சி அதிகாரிகள் கழிவறையை பராமரித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், சமுக விரோதிகளின் நடமாட்டத்தை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்