ஆபத்தான கழிவுநீர் கால்வாய்

Update: 2024-04-14 11:44 GMT

சென்னை கொடுங்கையூர், கிருஷ்ணமூர்த்தி நகரில் ஈஸ்வரன் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவின் நுழைவுவாயில் அருகே உள்ள கழிவுநீர் கால்வாயில் மூடி இல்லாமல் உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க தற்காலிகமாக சிமெண்ட் ஓடு மூலம் மூடி வைத்துள்ளனர். ஆனால், பூங்காவிற்கு வரும் குழந்தைகள் அதில் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே திறந்த நிலையில் உள்ள கழிவுநீர் கால்வாயிக்கு புதிய மூடி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்