கழிவுநீர் கால்வாய் மூடி வேண்டும்

Update: 2024-04-14 11:12 GMT

செங்கல்பட்டு மாவட்டம், இரும்புலியூர், பழைய ஜி.எஸ்.டி. சாலையில் ஒரு அங்கன்வாடி மையம் உள்ளது. இதன் அருகில் உள்ள கழிவுநீர் கால்வாயின் ஒரு பகுதி மூடாமல் திறந்த நிலையில் இருக்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், அந்த பகுதியில் வசிப்பவர்கள் கால்வாயில் குப்பைகளை போடுவதால் சுகாதார சீர் கேடு ஏற்படுகிறது. எனவே, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் கால்வாயை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்