சேலம் 6-வது வார்டு பெரிய கொல்லப்பட்டி ஸ்ரீராம் நகர் குடியிருப்புகள் நிறைந்த பகுதியாகும். அங்கு கழிவுநீர் கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் அந்த பணிகள் நடைபெறாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் பள்ளத்தில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. விஷப்பூச்சிகள், கொசு தொல்லை அதிகமாக உள்ளன. எனவே பாதியில் நிற்கும் கழிவுநீர் கால்வாய் பணியை விரைவில் தொடங்குவார்களா? என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
-சேகர், பெரிய கொல்லப்பட்டி.