கழிவுநீர் கால்வாய் மூடி எங்கே?

Update: 2024-03-24 11:05 GMT

சென்னை மேற்கு மாம்பலம், லட்சுமி தெருவின் அருகே கழிவுநீர் கால்வாய் திறந்த நிலையில் உள்ளது. இதனால் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகிறது. மேலும், அதிக அளவு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர். எனவே, மாநகராட்சி அதிகாரிகள் கழிவு நீர் கால்வாய்க்கு புதிய மூடியை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்