சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் பிரபல தனியார் மகளிர் கலை கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரிக்கு அருகிலேயே மாட்டு பண்ணை ஒன்று உள்ளது. இந்த பண்ணையில் இருந்து வெளியேறும் கழுவுநீரால் பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. மேலும், இந்த பண்ணையில் இருந்து வெளியேறும் கழிவு நீர் கல்லூாி வளாகத்தில் உள்ள கிணற்றில் கலக்கிறது. இதனால், கிணற்று நீர் மாசுபடுகிறது. மேலும், கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகி, டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் மாணவ- மாணவியர் பெரிதும் அவதி அடைகின்றனர். எனவே, மாநகராட்சி அதிகாரிகள் இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.