கால்வாய் மூடி சரி செய்யப்படுமா?

Update: 2023-12-31 11:44 GMT

சென்னை மண்ணடி, மெட்ரோ எதிரில் உள்ள ஜோன்ஸ் தெருவில் மழைநீர் கால்வாய் மூடி சில மாதங்களாக உடைந்து கிடக்கிறது. மழை காலம் என்பதால் பள்ளம் தெரியாமல் நடந்து செல்பவர்கள் திறந்து கிடக்கும் கால்வாயில் தவறி விழும் நிலை உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் தற்காலிகமாக பலகைகளை கொண்டு அந்த கால்வாயை மூடி வைத்துள்ளனர். உயிர் சேதம் ஏற்படும் முன் மாநகராட்சி அதிகாரிகள் கால்வாய் மூடியை சரி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்