சென்னை தரமணி, மகாத்மா காந்தி நகர், ஒளவையார் தெருவில் மழை பெய்து ஓய்ந்த பிறகும் கால்வாயில் இருந்து கழுவுநீர் வெளியேறுகிறது. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது, நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. மேலும், பள்ளிக்கூடத்திற்கு செல்லும் மாணவர்கள் இந்த பகுதியை கடந்து செல்லும் போது மூக்கை மூடி கொண்டு செல்லும் அவல நிலை உள்ளது . எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கழுவுநீரை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.