சென்னை பெரம்பூர், பாராக்ஸ் ரோடு டோபிகானா கவுசிங் போர்டு பகுதியில் கழிவுநீர் அதிகளவில் தேங்கியுள்ளது. மேலும், அதனுடன் மழைநீரும் சேர்ந்து சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. இதனால் அந்த பகுதியில் கொசுக்கள் அதிகளவில் காணப்படுகிறது மற்றும் துர்நாற்றம் அதிகளவில் வீசுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து கழிவுநீரை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.