அரியலூர் மாவட்டம், செந்துறை காலனி தெரு அருகே உள்ள தனியார் பள்ளி இயங்கி வரும் சாலையில் எப்போதும் அடுக்கு மாடி குடியிருப்பு பகுதிகளில் இருந்து வரும் கழிவுநீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. இதனால் அப்பகுதியில் பெரும் துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.