செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம், சதானந்தபுரம் கிராமம், ஜீவானந்தம் தெருவின் கடைசியிலும், சதானந்த சுவாமி மடத்திற்கு செல்லும் தெருவின் சந்திப்பிலும் 5 மாதங்களாக கழிவு நீர் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதன்காரணமாக அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை மூடியபடி சென்று வருகின்றனர். மேலும், தேங்கி கிடக்கும் கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேங்கி கிடக்கும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.