துணை சுகாதார வளாகம்

Update: 2023-10-15 17:14 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே ஒப்பதவாடி துணை சுகாதார நிலையத்திற்கு கனமூர், பென்னத்தூர், வரமலை குண்டா, பாரத கோவில், வி.கே நகர், ஆகிய பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்த சுகாதார நிலையம் முன்பு கழிவுநீர் மற்றும் மழைநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. எனவே இந்த சுகாதார வளாகத்தின் முன் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படுமா?

-பசுபதி, பர்கூர்.

மேலும் செய்திகள்