செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி பல்லாவரம் 21 வது வார்டில் ஆர்.கே.வி. அவென்யூ 6-வது தெருவில் மழைநீர் தேங்கி உள்ளது. இங்கு கொசுக்கள் அதிகளவில் காணப்படுவதால் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. மேலும் துர்நாற்றம் அதிகளவில் வீசுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.