சாக்கடை கால்வாய்கள்

Update: 2023-10-08 17:12 GMT

தர்மபுரி நகராட்சி பகுதியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் உள்ள பெரும்பாலான சாக்கடை கால்வாய்கள் தூர்வாரப்படாததால் கழிவு நீர் சாலையில் செல்கிறது. குறிப்பாக தர்மபுரி நகரில் உள்ள நேதாஜி பைபாஸ் ரோட்டில் இருபுறமும் உள்ள சாக்கடை கால்வாய்கள் தூர்வாரப்படாததால் மழை நீர் கழிவுநீரில் கலந்து சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாத அளவுக்கு சாலைகள் மோசமாக காணப்படுகிறது. எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக சாக்கடை கால்வாய்களை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கந்தசாமி, குமாரசாமிப்பேட்டை, தர்மபுரி.

மேலும் செய்திகள்