தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சி 4-வது வார்டு பாலசுப்பிரமணியம் தெருவில் நீண்ட நாட்களாக கழிவுநீர் கால்வாய் திறந்தவெளியில் உள்ளது. இதில் கொசு அதிக அளவில் உற்பத்தி ஆகி நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இந்த பகுதியில் கழிவு நீர் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
-கார்த்திக், மாரண்டஅள்ளி.