துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதி

Update: 2023-10-04 17:47 GMT

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி 11-வது வார்டில் சாக்கடை கால்வாயில் இருந்து அள்ளப்பட்ட குப்பை, கழிவுகளை அப்புறப்படுத்தப்படாமல் பல நாட்களாக சாக்கடை கால்வாய் அருகிலேயே போட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் துர்நாற்றத்தால் அவதியடைகின்றனர். மேலும் மழை பெய்தால் மீண்டும் அவை சாக்கடை கால்வாயிலேயே கலக்கும் என்பதால் அதனை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சாதிக்பாஷா, பாலக்கோடு.

மேலும் செய்திகள்