குப்பை மற்றும் கழிவுநீரால் ஆபத்து

Update: 2023-10-04 14:27 GMT

செங்கல்பட்டு மாவட்டம் மேடவாக்கம், குலசேகர ஆழ்வார் தெரு பெருமாள் கோவில் அருகில் உள்ள சாலையில் குப்பை மற்றும் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இந்த பகுதியில் அதிக அளவு மக்கள் வசிப்பதால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. மேலும், துர்நாற்றம் வீசுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பை மற்றும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்