சாக்கடை கால்வாயை சீரமைக்க கோரிக்கை

Update: 2023-10-01 16:19 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட பஞ்சப்பள்ளி சாலையில் நீண்ட நாட்களாக கழிவுநீர் கால்வாயில் உள்ள சிமெண்டு சிலாப்புகள் உடைந்த நிலையில் காணப்படுகிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதுடன் கொசு உற்பத்தியாகி நோய் பரவும் அபாயமும் உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே உடைந்த சிமெண்டு சிலாப்புகளை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-கோவிந்தன், மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும் செய்திகள்