தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சிக்கமாரண்டஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நீண்ட நாட்களாக கழிவுநீர் கால்வாய் இல்லை. இதனால் அந்த பகுதியில் சாலையோரம் குழி வெட்டி வீட்டின் உட்பகுதியில் இருந்து குழாய் அமைத்து கழிவுநீரை சாலையோரம் உள்ள குழியில் நிரப்பும் நிலை உள்ளது. அதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் அதிகம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து கழிவுநீர் கால்வாய் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முருகன், மாரண்டஅள்ளி.