தர்மபுரி மாவட்டம் கரகதஹள்ளி ஊராட்சி கடமடை கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் சரியாக அமைக்கப்படாததால் மழைநீர், கழிவுநீர் சாலைகளில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்தள்ளனர்.
-பழனி, தர்மபுரி.