கோவையை அடுத்த பாலத்துறையில் இருந்து நாச்சிபாளையம் செல்லும் சாலையில் சாக்கடையில் இருந்து கழிவுநீர் ஆறாக ஓடுகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. அந்த வழியாக நடந்து செல்பவர்கள், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே கழிவுநீர் சாலையில் செல்வதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.