சரியாக மூடப்படாத கால்வாய்

Update: 2022-08-18 11:00 GMT

திருவண்ணாமலை அண்ணா சிலை எதிரே வரிசையாக கடைகள் உள்ளன. கடைகளின் முன்பு கழிவுநீர் கால்வாய் செல்கிறது. இந்தக் கால்வாய் மேற்பகுதி மூடப்பட்டுள்ளது. பலர் அதை நடைபாதையாக பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில் அங்குள்ள ஏ.டி.எம். மையம் முன்பு கால்வாய் சரியாக மூடப்படாமல் திறந்த நிலையில் உள்ளது. அதன் மீது பொதுமக்கள் நடந்து செல்கின்றனர். அப்போது அவர்கள் தடுமாறி உள்ளே விழும் நிலை உள்ளது. எனவே விபரீதம் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அந்ேதாணி, திருவண்ணாமலை 

மேலும் செய்திகள்