கலவை-சென்னசமுத்திரம் செல்லும் சாலையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கால்வாய் உள்ளது. அதில் கழிவுநீர் தேங்கி உள்ளது. அந்தக் கழிவுநீர் காவத்தம்மன் கோவில் அருகே உள்ள 10 ஏக்கர் விவசாய நிலத்தில் கலக்கிறது. இதனால் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர். எனவே கழிவுநீர் கால்வாயை சரி செய்து தர வேண்டும்.
-விஷ்வா என்ற சடையாண்டி, கலவை.