பேரணாம்பட்டு ஒன்றியம் சாத்கர் ஊராட்சி பங்களாமேடு சாலையில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம் அருகில், குடியாத்தம்-வீ.கோட்டா தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் கழிவுநீர் கால்வாய் அடைக்கப்பட்டு சாலையில் பல ஆண்டுகளாக கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதுகுறித்து மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்திலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கால்வாயை தூர்வாரி கழிவுநீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும்.
-நா.சே.பாஸ்கர், பேரணாம்பட்டு.