வேலூர் மக்கான் சந்திப்பு அருகே அம்பேத்கர் நகர் உள்ளது. இங்கு ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் கால்வாய் வசதி இல்லை. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் அவதிப்படுகின்றனர். வீட்டில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் வீட்டின் முன்பு தேங்கி நிற்கிறது. மழைக்காலங்களில் கழிவுநீருடன் மழைநீரும் கலந்து தெருக்களில் தேங்கி சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. கழிவுநீர் தேங்குவதால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அந்தப் பகுதியில் கழிவுநீர் செல்ல கால்வாய் அமைக்க வேண்டும்.
-ஆதவன், வேலூர்.